நத்தம் அருகே 40 ஏக்கர் விவசாய நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 36 பேர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே பரளிப்புதூரில் பெரியண்ணன் என்பவருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. 2003-ல் பெரியண்ணன் காலமானார். 40 ஏக்கர் நிலத்தை தனது வாரிசுகள் 9 பேருக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.
இதனிடையே இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள கருப்பண்ணன் என்பவர், பெரியண்ணனின் 40 ஏக்கர் நிலத்தை தனது நிலம் எனக் கூறியதாகவும், கடந்த மாதம் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, மா, புளிய மரங்களை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியண்ணனின் வாரிசுகளான ராஜேந்திரன், கருப்புசாமி ஆகியோர் நத்தம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் வேதனையடைந்த பெரியண்ணனின் வாரிசுகளான ராஜேந்திரன் உட்பட 9 பேர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 36 பேர் நேற்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட அவர்களிடம் அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago