உள்ளாட்சி தேர்தல் - சிவகங்கை மாவட்டத்தில் இன்று வாக்குப் பதிவு :

உள்ளாட்சித் தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 15 பதவி களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர், காளையார்கோவில் ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், சிவகங்கை ஒன்றியத்தில் 2 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 12 ஒன்றியங் களில் 34 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 34 வார்டு உறுப்பினர் பதவிகளில் 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 2 ஒன்றியக் கவுன்சிலர், 2 ஊராட்சித் தலைவர், 11 வார்டு உறுப்பினர் என மொத்தம் 15 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 43 பேர் போட்டி யிடுகின்றனர். மொத்தம் 16,793 பேர் வாக்களிக்க உள்ளனர். இத் தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை

சிவகங்கை ஒன்றியத்தில் மேலப்பூங்குடி, ஒக்குப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கும், காஞ்சிரங்கால், நாலு கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நேற்று சிவகங்கை ஒன்றிய அலுவலகத்திலிருந்து அந்தந்த பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி நடந்தது. ஆனால் நேற்று அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் வாக்குப்பெட்டிகளை அனுப்புவதில் தேர்தல் அதிகாரி கள் சிரமப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE