இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் சார்பில், அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பது:
இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ), ‘டேர் டூ டிரீம் 2.0' என்னும் அகில இந் திய அளவிலான போட்டியை அறிவித்திருந்தது. இப்போட்டி, பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் அடிப்படையில், கல்வியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கானதாகும். பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தும் நோக்கத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது.
மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தொலைநோக்கு சிந்தனையைப் போற்றுவதும் இப்போட்டியின் நோக்கமாகும். அவரது 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து பலர் கலந்துகொண்டனர்.
இதில், தனிமனித பிரிவில் 22 பேர், தொடக்க நிலை நிறுவனங் கள்(Start-up category) பிரிவில் 18 பேர் என 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி, கடந்த அக்.4-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெற்றியாளர்களை கவுரவித்தார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் பாஸ்கர தாஸ், “மின்னணு ஆதரவு அமைப்புகளுக்குரிய எல்பிஐ ரேடார் சமிக்ஞைகளுக் கான கண்டறிதல் மற்றும் வகைப்படுத்தும் வழிகள்” என்ற தலைப்பில் திட்ட முன் மொழிவு அனுப்பியிருந்தார். மறுசீரமைக்கக்கூடிய ரிசீவர் கட்டமைப்பை பற்றிய இவரது திட்டத்துக்கு தனிமனித பிரிவில் 2-ம் இடம் கிடைத்ததால், அவரை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டி கவுரவித்தார்.
மேலும், இவரது திட்டத்தில் உள்ள தொழில்நுட்பம், நமது பாதுகாப்பு துறையின் கண்காணிப்புக்கு பெரிதும் உதவும். இந்த தொழில்நுட்ப யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.l
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago