திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி சாகுபடி முழுமை யாக நடைபெற்று வரும் நிலையில், டிஏபி, யூரியா உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக் கடைகளில் கடந்த ஓரிரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, நேற்று நடத்திய ஆய்வின்போது, உரக்கடை களில் உள்ள கையிருப்பு, பதி வேட்டில் உள்ள கையிருப்பு ஆகியவை ஒப்பிட்டுப் பார்க்கப் பட்டன. மேலும், அனைத்து உர விற்பனைக்கும் பிஓஎஸ் கருவியைப் பயன்படுத்தி ரசீது வழங்கப்பட்டுள்ளதா, உரங் களை விற்பனை செய்துவிட்டு வேறு விவசாயிகளின் பெயரிலோ அல்லது கடையில் வேலை பார்ப்பவர்களின் பெயரிலோ ரசீது போடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் தவறான பதிவேற்றம் செய்த 2 தனியார் உரக்கடைகளுக்கு 7 நாட்கள் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago