குத்தகைக்கான ஆவணத்தை சமர்ப்பிக்காததால் - பெட்ரோல் பங்க்குக்கு சீல்வைத்து இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் குத்தகை ஆவணம் சமர்ப்பிக்காமல் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க்குக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்து, இடத்தை கையகப்படுத்தினர்.

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பெட்ரோல் பங்க் கடந்த 25 ஆண்டு களாக செயல்பட்டுவந்தது. இந்த இடத்துக்கு குத்தகை அடிப்படை யில் மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சிக்கு எந்த வாடகை யும் செலுத்தப்படாததால், ரூ.1 கோடியே 25 லட்சத்து 68 ஆயிரம் வாடகை பாக்கி உள்ளது. மேலும், இந்த பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்த இடத்தை குத்தகை எடுத்ததற்கான ஆவணம் எதுவும் மாநகராட்சியிடம் சமர்ப் பிக்கப்படவில்லை.

இதையடுத்து, இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இடம் காலி செய்யப்படா ததையடுத்து, மாநகராட்சி ஆணை யர் க.சரவணகுமார் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலு வலர் எம்.ராஜசேகரன் தலைமை யில் அதிகாரிகள் கண்ணதாசன், ஆறுமுகம், சங்கரவடிவேல், அசோகன் உள்ளிட்டோர் நேற்று அங்கு சென்று, பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.

மேலும், தனியார் ஆக்கிரமிப் பில் இருந்து கையப்படுத்தப் பட்டுள்ள இந்த இடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் கூறிய போது, “தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொடி மரத்து மூலை பகுதியில் 11,470 சதுர அடி பரப்பளவில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்த இடத்துக்கு உரிய குத்தகை தொடர்பான ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால், ரூ.6 கோடி மதிப்பிலான அந்த இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தி உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்