தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் பேரில் ஊரகப்பகுதிகளில், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டிவிட்டு புதிய சாலைகள் அமைக்க வேண்டும்.சாலைகளின் மேற்தளம் குடியிருப்பு பகுதிகளின் தரைமட்டத்தினை விட அதிகரிக்ககூடாது. தேவை ஏற்படின் குடியிருப்பு பகுதிகளின் தரைமட்ட அளவுக்கு சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு பணி மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள சாலைகளை பழுதுபார்த்தல், பலப்படுத்துதல் பணிக்கு சாலைகளில் ஏற்கெனவே உள்ள மேல்தளத்தினை முற்றிலும் நீக்கி விட்டு புதிய மேல்தளம் அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீர்குடியிருப்பு பகுதிகளுக்கு நுழையாமல் முறையாக வடிவதற்கு வழிவகை ஏற்படுகிறது.
ஊராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளும்போது ஏற்கெனவே உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை (நடைபாதை, வடிகால் முதலியவை) பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு, மூன்று அடுக்கு அடர்தார் தளம் போடப்பட்டு இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர்தார் தளம் அமைத்து சாலை மட்டத்தை உயர்த்தவேண்டியது இல்லை. எந்த சூழ்நிலையிலும் சாலைகளின் மட்டம் அதிகரிக்கப்படக் கூடாது. சாலைகளின் மேல்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப் படும் கனத்துக்கு சுரண்டி எடுத்து விட்டு, அதே அளவுக்கு மேல் தளம் இட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத சாலைப் பணிகள் குறித்துஇணையதளம் வாயிலாக (www.tnrd.gov.in) பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளின் மேல்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப் படும் கனத்துக்கு சுரண்டி எடுத்து விட்டு, அதே அளவுக்கு மேல் தளம் இட வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago