வாக்குச்சாவடிகளில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நாளை (அக்.9) நடைபெறுகிறது. கூடலூர் ஊராட்சி ஒன்றியம்மசினகுடி ஊராட்சியில் வார்டு எண் 4-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், சேரங்கோடு ஊராட்சியில் வார்டு எண் 11-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் என 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட 20 பேர் வேட்பு மனு தாக்கல்செய்தனர். இதில் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். சேரங்கோடு ஊராட்சியில் 6 பேர், மசினகுடி ஊராட்சியில் 6 பேர், நடுஹட்டி ஊராட்சியில் 3 பேர் என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையொட்டி 3 இடங்களில் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்த முகக்கவசங்கள், கையுறைகள், வாக்காளர்களுக்கு வழங்கும் கையுறைகள், பிளாஸ்டிக் வாளிகள், முழு பாதுகாப்பு கவச உடைகள் என 13 வகையானஉபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உடன் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்