கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் முறையே ரூ. 1 கோடி மதிப்பீட்டில் திறக்கப் பட்டன.
கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் நேற்று 1,224 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டன.
அதில் ஒன்றாக கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1,000 எல்பிஎம் திறன் கொண்ட ரூ. 1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது. இம்மைய உபகரணங் கள் ஒரு நிமிடத்தில் 1,000 லிட்டர் ஆக்சிஜனை காற்றிலிருந்து உற் பத்தி செய்யும் திறன் பெற்றதாகும்.
உற்பத்தி செய்யப்படும் ஆக்சி ஜன் நேரடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் 94 சதவீதம் தூய்மையானது. இந்நிகழ்வில் ஆட்சியர் கி.பால சுப்ரமணியன், ஐயப்பன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதே போல் விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் நேற்று திறக்கப்பட்டது.
நிகழ்வை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த கல்லுாரி முதல் வர் குந்தவிதேவி பேசுகையில், “கரோனா தொற்று காலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது பேருதவியாக இருக்கும்” என்றார்.
இவ்விழாவில் மருத்துவ கண் காணிப்பாளர் புகழேந்தி, துணை முதல்வர் பூங்குழலி கோபிநாத், குடிமை மருத்துவ அலுவலர் சாந்தி, உதவி குடிமை மருத்துவ அலுவலர், வெங்கடேசன், மயக்கவியல் துறை தலைவர் அருண்சுந்தர், இணை பேராசிரியர் மகேந்திரன், நிர்வாக அதிகாரிகள் ஆனந்தஜோதி, சிங்காரம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
ஒரு நிமிடத்தில் 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்திறன் பெற்றதாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago