கரோனா நிவாரணம் வழங்கக்கோரி - வீட்டுவேலை தொழிலாளர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று வீட்டுவேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் சீதாலெட்சுமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட தலைவர் பானுமதி முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கிளாரா பேசினார். இதில் ஏஐடியூசி மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன், தொமுச மாவட்ட செயலாளர் கருணாநிதி, சமம் மக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்