அரசு வேலை வாங்கி தருவதாக கூறி - போலி நியமன ஆணை கொடுத்து இளைஞரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி : கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கைது

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி வள்ளுவர்நகரைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் திருமால் (31), கரிசன்விளையைச் சேர்ந்த மணி மகன் கணேசன் (53), அவரது மனைவி பார்வதி (51) ஆகிய மூவரும், காயாமொழி அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் ரமேஷ் (31) என்பவருக்கு அறிமுகமாகினர். இவர்கள் மூவரும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பிய ரமேஷ், இரண்டு தவணைகளாக ரூ.2. 50 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் பணி நியமன ஆணை ஒன்றை ரமேஷூக்கு கொடுத்துள்ளனர். அதுபற்றி விசாரித்த போது அது போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ரமேஷ் புகார் செய்தார். இவர்கள் மூவரும் வேறு சிலரிடமும் இதேபோல், அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமண ஆணை தயாரித்து, பணத்தை வாங்கி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. திருமால், கணேசன், பார்வதி ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்