திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி வள்ளுவர்நகரைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் திருமால் (31),கரிசன்விளையைச் சேர்ந்த மணி மகன்கணேசன் (53), அவரது மனைவி பார்வதி (51) ஆகிய மூவரும், காயாமொழி அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் ரமேஷ் (31) என்பவருக்கு அறிமுகமாகினர். இவர்கள் மூவரும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பிய ரமேஷ், கடந்த 19.11.2020 அன்று ரூ.2 லட்சமும், தொடர்ந்து 21.11.2020 அன்று ரூ.50 ஆயிரமும் அவர்களிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் பணிநியமன ஆணை ஒன்றை ரமேஷூக்குகொடுத்துள்ளனர். அதுபற்றி விசாரித்த போது அது போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ரமேஷ் புகார் செய்தார்.
இவர்கள் மூவரும் வேறு சிலரிடமும் இதேபோல், அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமண ஆணை தயாரித்து, அதில் போலியான அரசு முத்திரைகளை பயன்படுத்தி கையெழுத்திட்டு பணத்தை வாங்கி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. திருமால், கணேசன், பார்வதி ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago