வாலாஜாபாத் அருகே உள்ளஉள்ளாவூர் பகுதியில் லட்சுமி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்குச் சாவடிக்கு வெளியே வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதில் லட்சுமியின் பெயர் தனலட்சுமி என்று ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் வாக்களிக்க வரும் மக்கள் குழப்பமடைவார்கள் என்று லட்சுமியின் ஆதரவாளர்கள் தகராறு செய்தனர். இதனால் அந்த கிராமத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பெயர் சரி செய்து ஒட்டப்பட்ட பிறகே வாக்குப் பதிவு தொடங்கியது.
இதேபோல் களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 90 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன. வாக்களிக்க வந்தஅவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குப் பதிவை ஆய்வு செய்ய வந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவியிடம் முறையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் சிங்காடிவாக்கம் பகுதியில் ஒருவரின் வாக்கை வேறு சிலர் மாற்றி செலுத்திவிட்டனர். பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். 17பி - விண்ணப்பம் மூலம் அவர் மறுவாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago