திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் அக்.9 -ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் முன்னுரிமை அடிப்படையில் மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட உள்ளது.
இதற்காக, மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாம்களில், இதுவரை குடும்ப அட்டைகள் பெறாததிருநங்கைகள், மின்னணு குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago