கடலூர், புதுச்சேரி நீர்நிலைகளில் - மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் :

By செய்திப்பிரிவு

மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர்நிலைகள் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

மகாளய அமாவாசையன்று நமது முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும்.மகாளய அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய திரண்ட பொதுமக்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருவத்திபுரம் கெடிலம் ஆறு, கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் உள்ள தென்பெண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகெங்கை குளம், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு, புதுவை கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்