மத்திய மண்டலத்திலுள்ள 268 நீர்நிலைகள் ஆபத்தானவை என மத்திய மண்டல ஐ.ஜி வே.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், ஆறுகள் என அனைத்து நீர்நிலைகளிலும் நீர் நிரம்பி வருகின்றது. இதில் குளிக்க, விளையாடச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழம் அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் திருச்சி, புதுக் கோட்டை, பெரம் பலூர், அரியலூர், கரூர், தஞ்சா வூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் ஆபத்தான நீர்நிலைகள் என 268 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் 110 இடங்களில் எச்ச ரிக்கை பலகை வைக்கப்பட்டுள் ளது. மீதமுள்ள இடங்களிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்படும். ஒலிப்பெருக்கி மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் ஒரு எஸ்ஐ தலைமையில் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago