தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நடைபெறும் மகப்பேறு இறப்புகளில் 8 சதவீதம், பாதுகாக்கப்படாத கருக்கலைப்பு மூலமாகவே நடைபெறுகின்றன. இதைத்தடுக்கும் வகையில், எளிய நவீன கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளன. இதனை, 7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிசோதனைக்கு உட்பட்டு கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படும்.
6 முதல் 8 வார கர்ப்பங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 முதல் 12 வார கர்ப்பங்களை அரசு மருத்துவமனைகளிலும் நம்பகத்தன்மையுடன், சட்டத்துக்கு உட்பட்டு, இலவசமாக, நவீன முறையில் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. கருக்கலைப்பு செய்துகொண்டவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகலாம். கருக்கலைப்பு சம்பந்தமான புகார்களை 99522 33131 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago