சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாண விகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் www.Scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவர் கள், பள்ளிப்படிப்பு கல்விஉதவித்தொகை திட்டத்துக்கு நவம்பர் 15-ம் தேதி வரையிலும்,பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு நவம்பர் 30-ம் தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ,மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப் பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களது UDISE/SHE/NCVT குறியீட்டுஎண்ணை மாணவ, மாணவி களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டிநெறிமுறைகள் www.minorityaffairs.aov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்’’. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago