செய்யாறு, வெம்பாக்கத்தில் கொட்டித்தீர்த்த கனமழை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதியில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 43.6 மி.மீ., மழை பெய்துள்ளது.

இதில், அதிகபட்சமாக வெம்பாக்கம் பகுதியில் 111 மி.மீ., மற்றும் செய்யாறு பகுதியில் 102 மி.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. மேலும், ஆரணி 55, செங்கம் 34.6, ஜமுனா மரத்தூர் 32, வந்தவாசி 40, போளூர் 30.6, திருவண்ணாமலை 25, தண்டராம்பட்டு 16.6, கலசப்பாக்கம் 20, சேத்துப்பட்டு 37.8, கீழ்பென்னாத்தூர் 18.6 மி.மீ., மழை பெய்துள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து

தொடர் மழையால் அணை களுக்கு நீரவரத்து உள்ளது. சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 220 கனஅடி தண்ணீர் வருகிறது.

119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 85.40 அடியாக உள்ளது. குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 80 கனஅடியும், மிருகண்டா நதி அணைக்கு விநாடிக்கு 14 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

அதேபால், சாத்தனூர் அணை பகுதியில் 26 மி.மீ., குப்பநத்தம் அணை பகுதியில் 20.4 மி.மீ., மிருகண்டா நதி அணை பகுதியில் 31 மி.மீ., மழை பெய் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்