கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை :

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம், புதுவையில் மழைப் பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடலூர் மாவட் டம் முழுவதும் கடந்த சில தினங் களாக காலை நேரங்களில் வெயி லும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து. தொடர்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பம், பண் ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. நேற்று காலையும் மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டுபெய்த மிதமான மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர்தேங்கி நின்றன. குறிப்பாக, விழுப் புரம் நகரில் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், விஜிபி நகர், தாமரைகுளம் உள்ளிட்ட பகுதியில் முழங்கால்அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இப்பகுதி வீதிகளில், வாகன ஓட்டிகளும் சிரமத் திற்கு ஆளானார்கள். புதிய பேருந்துநிலையம் வழக்கம் போல மழை நீரில் தத்தளித்தது.

இந்த மழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சம்பா விவசாய பணிகளில்மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த மழை தங்களுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க் கின்றனர்.

கடந்த இரு தினங்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக திருக்கோவிலூர் பகுதியில் 55 மி.மீட்டர் பதிவானது. சராசரியாக மாவட்டத்தில் 3.3 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. மழை யால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்