உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேளான் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகள் பேரணியில், வாகனத்தைக் கொண்டு விபத்து ஏற்படுத்தியதில், விவசாயிகள் பலர் உயிரிழந்ததைக் கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட சகாக்களை கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இச் சம்பவத்துக்கு நீதி கேட்க சென்ற பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டுக் காவலில் வைத்த மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸார் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று மாலை வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிதலைமை தாங்கினார். இதில் மத்தியஅரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலத்துணைத் தலைவர் மணிரத்தினம், மாநிலப்பொது செயலாளர் சேரன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், புவனகிரி நகர தலைவர் கிருஷ் ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பஞ்சா பில் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்த்தப்பட்டதை விடஒரு கொடுமையான படுகொலைசம்பவம் தற்போது உத்திரப் பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடன் சென்றஅவரது மகனின் கார் விவசாயிகள் மீது மோதி 4 பேர் அந்தஇடத்திலேயே இறந்திருக்கிறார்கள். அதன் பிறகு நடந்த கலவரத் தில் 5 பேர் என மொத்தம் 9 பேர் இறந்திருக்கிறார்கள்.
ஜாலியன் வாலாபாக்கில் கூடபடுகொலை நடந்த பிறகு அந்தஇடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் செல்ல ஆங்கிலேய அரசு அனுமதித் தது. ஆனால் இங்கு சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லவும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவும் அரசு அனுமதிக்கவில்லை.ஆங்கில ஏகாதிபத்தியத்தை வென்றெடுத்த நாம் மோடி ஏகாதிபத் தியத்தையும் வென்றெடுப்போம்” என்றார்.
விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட காங்கி ரஸ் தலைவரும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் தலை மையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்றுகாங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ்காந்தி, ராஜன், ரஞ்சித்குமார் இன்பராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி பெரியார் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். சிஐடியூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விடுத லைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகேநேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைநிலையச் செயலாளர் செல்வநந்தன் தலைமை தாங்கினார். இதில் ஏராள மான விசிகவினர் பங்கேற்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago