திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் தியாகிகள் நினைவு ஜோதி எடுத்து வரப்பட்டது. மூத்த உறுப்பினர் சுப்பையா கொடியேற்றினார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜான்ஜோர்ஜியா, பிச்சைமுத்து, ஜீவா நந்தினி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக் குழுத் தலைவர் வருணன் வரவேற்றார். செயலாளர் வீரையன் முன்னிலை வகித்தார் மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நகர் செயலாளர் ஆசாத் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, என்.பாண்டி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர். கணேசன் ஆகியோர் பேசினர்.
நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வில் நகர் செயலாளராக அரபுமுகமது தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட நகர்க் குழுவும் அமைக்கப்பட்டது. கணேசன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago