வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் மக்காச் சோளம், நெல், பயறு வகைகள், பருத்தி மற்றும் கடலை ஆகியன பிரதான பயிர்களாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தரமான விதைகளைப் பயன்படுத்தும் போது அதிக மகசூல் பெற முடியும். நெல், மக்காச்சோளம் போன்ற தானியங்களுக்கு 90 முதல் 80 சதவீதமும், பயறு வகைகளுக்கு 75 சதவீதமும், ரகப்பருத்திக்கு 65 சதவீதமும், வீரிய ஒட்டு பருத்திக்கு 75 சதவீதமும் மற்றும் கடலைக்கு 70 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.
மேலும் அனைத்து விதைகளிலும் குறைந்தபட்சம் 97-98 சதவீத சுத்தத் தன்மை இருக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் நெல், மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளுக்கு 12-13 சதவீதமும் பயறு மற்றும் கடலை வகை விதைகளுக்கு 9 சதவீதமும் இருத்தல் வேண்டும். சான்று பெறப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
ஆகவே, தரமான விதைகளைத் தேர்வு செய்ய விவசாயிகள் தங்களின் விதைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து பயன்பெறலாம் என விதைப் பரிசோதனை அலுவலர் சிங்காரலீனா, வேளாண்மை அலுவலர்கள் ராமசாமி, சாய்லட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 99528 88963 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago