வஉசி.யின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி கல்லூரி சார்பில் மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி வரும் 9-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு கூறியதாவது:
கல்லூரி முன்பிருந்து தொடங்கும் போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார். அமைச்சர் பெ.கீதாஜீவன்தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முன்னிலை வகிக்கிறார்.
வஉசி கல்லூரி முன்பு தொடங்கும் ஓட்டம், தமிழ் சாலை, வஉசி சாலை, பழைய துறைமுகம், பனிமய மாதா பேராலயம், ஜார்ஜ் சாலை, தலைமை தபால் நிலையம், தெற்கு காவல் நிலையம் வழியாக மீண்டும் வஉசி கல்லூரியை வந்தடையும். போட்டி தூரம் 9 கிமீ. முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.4,000, 3-ம் பரிசு ரூ.3,000, 4-ம் பரிசு ரூ.2,000 மற்றும் 5 முதல் 10 இடங்களை பிடிப்போருக்கு தலா ரூ.1,000 வீதம், மாணவ,மாணவியருக்கு தனித்தனியாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக் கும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை, கல்லூரிச் செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago