டாஸ்மாக் கடைகளைமூட உத்தரவு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம், அய்யனாரூத்து டாஸ்மாக் கடைகளை இன்று (அக்.6) நள்ளிரவு 12 மணி வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் 2-ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம், தருவைகுளம், பரிவல்லிக்கோட்டை, குறுக்குச்சாலை, காயாமொழி, மெஞ்ஞானபுரம், அய்யனேரி, இளையரசனேந்தல் டாஸ்மாக் கடைகளை நாளை (அக். 07) காலை 10 மணி முதல் 9-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், வைகுண்டம் பகுதிகளில் உள்ள டாஸ் மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்