நூறு வேலைத் திட்டத்தில் பணிக்கே வராமல் வந்ததாக கணக்கு : காளையார்கோவில் அருகே முறைகேட்டை கண்டுபிடித்த அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிக்கே வராமல் வந்ததாக கணக்கு காட்டியதை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

காளையார்கோவில் அருகே ஏரிவயல் ஊராட்சி காஞ்சிரத்தில் நூறுநாள் வேலைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பணிக்கே வராமல் வந்ததாக கணக்கு காட்டி பணத்தை முறைகேடு செய்வதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சத்யன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காஞ்சிரத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது பணி செய்வதாக கொடுக்கப்பட்ட கணக்கைவிட குறைவான பணியாளர்களே பணிபுரிந்தனர். இதையடுத்து பணிக்கு வராத 12 பணியாளர்களுக்கு ‘ஆப்சென்ட்’ போட்டதோடு, ஆவணங்களையும் எடுத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்