விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று மாலை ரோந்து சென்றனர். கோயில் புலிகுத்தி கிராமத்துக்குள் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை அலுவலர்கள் சந்தேகத்தின்பேரில் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.
லாரியை சோதனை செய்தபோது அதில் குட்கா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 50-க்கும் மேற்பட்ட குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். சங்கிலி கருப்பசாமி (30) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கோவில்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் வாடகைக்கு தங்கியிருந்து குட்காவை பதுக்கி விற்றது தெரிய வந்தது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் பெங்களூருவில் இருந்து லாரி ஓட்டி வந்த ராமர் (50), மகேஷ் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான முனீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago