கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - 8 மாதங்களுக்குப் பின் மக்கள் குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து மனு அளித்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். 3 வாரங்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் கரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மக்கள் அளித்தனர். கூடுதல் ஆட்சியர்(வருவாய்) ரஞ்சித்சிங் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 8 மாதத்துக்கு பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முழுவதும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்