அரசு நிலத்தை பட்டா மாறுதல் செய்து மோசடியில் ஈடுபட்ட 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் தேனி ஆட்சியர் குடியிருப்பு, பெருந்திட்ட வளாகம், ஆயுதப் படை மைதானம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள், காலி இடங்கள் உள்ளன. இந்த அரசு இடங்களைத் தனியாருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து பெரியகுளம் சார்ஆட்சியர் ரிஷப் விசாரணை நடத்தியதில் தேவதானப் பட்டியைச் சேர்ந்த சர்வேயர் சக்திவேல் இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை பட்டா மாறுதல் செய்ய உதவியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இவரை சார் ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தார்.
தொடர் விசாரணையில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், போடி வட்டாட்சியர் ரத்தினமாலா, போடி துணை வட்டாட்சியர் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் க.வீ.முரளிதரன் நேற்று உத்தரவிட்டார். இவர்கள் 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago