மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,315 கனஅடியாக குறைந்தது :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 13,315 கனஅடியாக குறைந்தது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று நீர்வரத்து குறைந் தது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரத்து 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 13 ஆயிரத்து 315 கனஅடியானது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 350 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரு கிறது. இதனிடையே, நேற்று முன்தினம் 73.86 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 74.42 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 36.62 டிஎம்சி-யாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

2-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாகவும், 3-ம் தேதி 16 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற அளவுக்கு நீர்வரத்து சரிந்தது. மாலை அளவீட்டின் போதும் அதே அளவில் தொடர்ந்து காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்