தஞ்சாவூர் அருகே புத்தூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை திறக்காத தால், கடந்த 10 நாட்களாக நெல் மணிகளை கொட்டி வைத்து காத்திருந்த விவசாயிகள் ஆத்திர மடைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை அருகே புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், புத்தூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய கடந்த 10 நாட்களாக 5 ஆயிரம் மூட்டை நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்துக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து, ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். ஆனால், இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், மழையில் நனையும் நெல்லை பாதுகாக்க விவசாயிகள் சிரமப் பட்டு வந்தனர்.
இந்நிலையில், நெல்கொள் முதல் நிலையம் நேற்றும் திறக் கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோருடன் இணைந்து கொள்முதல் நிலையம் முன்பாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த உயர் அலுவலர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு பட்டியல் எழுத்தாளர் சக்திவேல் என்பவரை நியமித்து, நெல் கொள்முதல் பணியை தொடங் கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago