நெல் கொள்முதல் நிலையத்தில் - சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நெல் கொள்முதல் நிலைய சுமைப் பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்கம் மற்றும் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று திருவாரூரில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சுமைதூக் கும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.12 கூலி வழங்க வேண்டும்.

கொள்முதல் பணியாளர் களுக்கு குறைந்தபட்சம் மாதச் சம்பளம் ரூ.15,000 வழங்க வேண்டும். 2012-ம் ஆண்டு முதல் கொள்முதல் பணியில் சேர தகுதியுள்ளவர் பட்டியலில் உள்ள அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்ப வேண்டும்.

ஓய்வுபெற்ற பணியாளர்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொள்முதல் பணியா ளர்களுக்கு தீபாவளி போனஸை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்