திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர்கிராமத்தில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடுகள் அடங்கிய பாறை கண்டெடுக்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், விஷ்ணு, ஞானவேல், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆடங்கிய ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆய்வுகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது அங்கு வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான ஆவணமாக அறியப்படும் குறியீடுகள் அடங்கிய பாறையை கண்டெ டுத்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறும்போது, "பழங்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி வந்தனர். அவ்வாறு நிலங்களை தானமாக வழங்கும் கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூர்வமாக அதிகார தகவல்களை அந்த காலத்தில் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல சான்றாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில்,திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் என்ற கிராமத்தில் எங்கள் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, ‘மேலக்குட்டை ஏரியின்’ கீழ்ப்பகுதியில் விவசாயி தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் நடுவே இயற்கையாக உள்ள சிறிய பாறையில் குறியீடுகள் பல இருப்பதை கண்டறிந்தோம்.
முக்கோண வடிவமுள்ள அந்த பாறையில் சூரியன், பிறைச்சந்திரன் உருவங்கள் மேற்புரமும், அதன் கீழே குடையும் அதன் அருகே கமண்டலமும் அமைந்துள்ளன.அதன் அருகே அளவு கோலும், பாதங்களும் காட்டப்பட்டுள்ளன.
இக்குறியீடுகள் திருமாலின் வாமன அவதாரத்தினைக் குறிப்பிடுவதாக அமைந்துள் ளது. பொதுவாக சாசனங்கள் எழுத்துவடிவில் பொறிக்கப்படு வது மரபு. அதற்கு மாறாக இங்கே கோட்டோவியமாக வரை யப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
இந்த கோட்டோவியக்கல்லா னது ஒருவர் தமது ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை வைணவக் கோயில்களுக்காக கொடை யாகக் கொடுத்து அதன் விவரத்தை இக்குறியீடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இக்கோட் டோவிய கல்லானது கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த வட்டாரத்தில் வரலாற்றுபின்புலத்தை பறைசாற்றும் சிறப்புக்குரிய ஆவணமாகும். இத்தகைய வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago