சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் :

திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் 58 ஏக்கர் பரப்புக்கு, ரூ. 42.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியம் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது நில ஆவணங்களை சிட்டா, அடங்கல், நிலவரைபடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிறு,குறு விவசாயிக்கான சான்றிதழ் மற்றும் 2 புகைப்படங்களுடன் திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள் 2 ஹெக்டேர் பரப்பிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டேர் பரப்பிலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசனக் கருவிகளை அமைத்து ஏற்கெனவே 7 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் புதிதாகவிண்ணப்பிக்கலாம். இதேபோலமின்மோட்டார் அல்லது டீசல் இன்ஜின் அமைக்க ரூ.15 ஆயிரம், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் கொண்டுவரும் குழாய்கள்அமைக்க ரூ.10 ஆயிரம், நீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களது நிலங்களில்சொட்டுநீர் பாசனக் கருவிகள்அமைத்த பிறகு இத்திட்டத்துக்கான மானியத்தை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை உதவிஇயக்குநர் 97918 91288, தோட்டக்கலைத் துறை அலுவலரை 95788 44874, உதவி அலுவலரை 90471 16799, 70926 08799 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE