நீலகிரி மாவட்டத்தில் அரசியல் சார்ந்த கூட்டங்கள், சமூக விழாக்கள், கோயில் விழாக்கள், குடும்பம் சார்ந்த நிகழ்வுகளுக்கு சார்- ஆட்சியர் அல்லது வருவாய்கோட்டாட்சியரிடம் முன்அனுமதி பெறவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:நீலகிரி மாவட்டத்தில் கரோனாபரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், சமூக விழாக்கள், கோவில் விழாக்கள், குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகள்மாவட்டம் முழுவதும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் சார்ந்த கூட்டங்கள், சமூக விழாக்கள், கோயில் விழாக்கள், குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு தொடர்புடைய சார்-ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே மேற்படி விழாக்களை நடத்த வேண்டும். மேற்படிநிகழ்வுகளில் அரசின் வழிகாட்டுநெறிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பதை வட்டாட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago