புதுச்சேரியில் போக்குவரத்து நெரி சலை குறைக்க இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி சிலை சதுக் கங்களை இணைக்கும் வகையில் ரூ.400 கோடியில் மேம்பாலங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக் கையை தர மத்திய அரசு புதுச் சேரி பொதுப்பணித்துறைக்கு அனுமதிஅளித்துள்ளது. இதை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதி செய்துள்ளார்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது இசிஆரில் இருந்து கடலூர் சாலை செல்வதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது. இதனால் மேம்பாலங்கள் அமைக்க கோரிக் கைகள் எழுந்தன. இதையடுத்து மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு இதுதொடர்பாக ஒப்புதல் அளித்து வரைபடம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “இந்திராகாந்தி மற்றும்ராஜீவ்காந்தி சிலை சதுக்கங்களை இணைக்க மேம்பாலம் வேண்டும்என்பது நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள கோரிக்கையாகும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) பொதுப்பணித் துறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேம்பாலங்கள் அமைவதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வரைபடம் தயாரிக்கப் படுகிறது. இது ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, “ராஜீவ்காந்தி சதுக்கத்திலும், இந்திராகாந்தி சதுக்கத் திலும் மேம்பாலம் அமைக்க ஏற்கெனவே மத்திய அரசிடமிருந்து அனுமதி வந்து பணிகள் நடக்கிறது. மேம்பாலங்கள் அமைக்க ஒரு விரிவான விவரங்களை தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுத்து திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க ஒப்புதல் தந்துள்ளது.
இத்திட்டத்துக்கான நடவடிக்கை களை எடுக்க திட்ட அறிக்கையை தரவும் மத்திய அமைச்சகம் பொதுப்பணித்துறையை கோரியுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் இப்பணி நடைபெறும் இடங்களையும் ஏற்கெனவே நேரில் வந்து பார்வை யிட்டனர்.
இத்திட்டத்துக்கு முழு நிதிய ளிக்க மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதரத் திட்டங்களைப் போல் அல்லாமல் நிதி நெருக்கடியால் ஏற்படும் தாமதங்கள் இதில் ஏற்ப டாது. அதனால் இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியும். திட்டம் இறுதி வடிவம் பெற்றவுடன் இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டக்காலம் நிர்ணயிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேம்பாலம் பற்றி விசாரித்த போது, “புதுச்சேரியில் ராஜீவ்காந்தி சிலை பகுதியில் அமையவுள்ள மேம்பாலமானது இசிஆர் ஒரு பகுதியும், மற்றொரு பகுதி காமராஜ் சாலையிலிருந்து ஜிப்மர் நோக்கி ஒருபிரிவும், மற்றொரு பிரிவு வழுதாவூர் சாலை வரையிலும் என்று ஐந்து பிரிவுகளாக வரும். அதேபோல் இந்திராகாந்தி சிலை பகுதியில் நெல்லித்தோப்பு மார்க் கெட்டிலிருந்து விழுப்புரம் சாலை வரையில் ஒரு பிரிவும், இசிஆரில் மற்றொரு பிரிவும் வரும். அது தொடர்பான வரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் வந்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இருக்காது” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago