சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகே குடிநீர் ஊருணி தோண்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய 17 குடும்பங்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தெற்கு வண்டல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அங்குள்ள கண்மாய் நீரையே மக்கள் குடிநீர் உட்பட பல்வேறு பணிகளுக்கு நம்பி உள்ளனர். ஆனால், விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவதால், கண்மாயில் சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் தண்ணீ ருக்காக கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் ஊருணி தோண்டி தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், புதிதாக ஊருணி தோண்டும் திட்டம் இல்லாததாலும், ஊராட்சியில் நிதி இல்லாததாலும் ஊருணி தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து இக்கிராமத்தைச் சேர்ந்த 17 குடும்பங்கள் தங்களது 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.
ஆர்.எஸ்.மங்கலம்- சாலைக்கிராமம் சாலையை யொட்டி உள்ள அந்த நிலங்களின் மதிப்பு ரூ.1 கோடி. பிரதான் தொண்டு நிறுவனம், ஊருணியைத் தோண்டித்தர முன் வந்தது. கூடுதல் நிதியை மக்கள் வழங்க ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து ஊருணி தோண் டும் பணியை தமிழரசி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ மதியரசன், ஊராட்சித் தலைவர் முத்துக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன், ஒன்றியக் கவுன்சிலர் ஜூலியாபவுல் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago