குமாரபாளையத்தில் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகம் உள்ளன. அவற்றில் தரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அருண் தலைமையிலான அதிகாரிகள் குமாரபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மீன் இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதே இடத்தில்பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பழைய மீன் இறைச்சி 7 கிலோவிற்பனைக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், மீன்கள் கெட்டுப் போகாமல்இருக்க பார்மலின் ரசாயனம் பயன்படுத்தியதும் தெரியவந்தது. மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதையடுத்து விதிமுறை மீறி செயல்பட்ட 5 மீன் இறைச்சிக் கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago