நடப்பாண்டில் 3-வது முறையாக - கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 3-வது முறையாக 51 அடியை எட்டியது. இதையடுத்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் கடந்த மாதம் 51 அடியை எட்டியது. பின்னர் மழை குறையத் தொடங்கியதால் நீர்மட்டமும் குறைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மழை தொடர்வதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 498 கனஅடியாக இருந்தது.

அணையில் இருந்து வலது கால்வாயில் விநாடிக்கு 177 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் 258 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் கொள்ளளவான 52 அடியில் நேற்று நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நீர்மட்டம் 51 அடியை எட்டியது.

இதையடுத்து, அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்நேரத்திலும் கூடுதல் தண்ணீர் திறக்கும் நிலை நிலவுகிறது. இதையடுத்து, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங் கரையோரப் பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறையினர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்