அரசு கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி முகாம் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம் திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மருத்துவர்களுக்கு பயிற்சியளித்த கால்நடை மருத்துவத் துறை மண்டல இணை இயக்குநர் தனபாலன் பேசியபோது, “கால்நடைகளுக்கான நோய்கள் புதிய பரிமாணம் பெற்று, கால்நடை வளர்ப்போர் மற்றும் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் கால்நடை மருத்துவர்கள் பணியாற்றினாலும், இந்த சவாலை சமாளித்து வருகின்றனர்” என்றார்.

பயிற்சியின்போது, கறவை பசுக்களை பாதிக்கும் வாய் காணை நோய், மடிநோய், சப்பை நோய், சினை பிடிக்காமை மற்றும் படுக்கை நோய் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், துள்ளுமாரி நோய், நீலநாக்கு நோய், ஆட்கொல்லி நோய், குடற்புழு தாக்கம் போன்றவற்றால் மாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வாக அனைத்து கால்நடைகளுக்கும் உரிய தடுப்பூசியை விடுபடாமல் செலுத்த கால்நடை வளர்ப்போரை ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்