தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய போலீஸார் தீவிர சோதனை, ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 40 ரவுடிகள் உள்ளிட்ட 90 பேர் பிடிபட்டனர். ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பழைய வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 101 தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். வாகனச் சோதனையின்போது 2,019 வாகனங்கள் சோதனை யிடப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1,846 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 962 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணியை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago