தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் - 1,239 மையங்களில் 4-வது கட்ட கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 729 இடங்களில் நேற்று நான்காம் கட்ட கரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்துக்கு 10 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடுப்பூசி மையத்துக்கு தடுப்பூசி போட வந்தவர்கள் மத்தியில் டீன் டி.நேரு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, தடுப்பூசி பொறுப்பு மருத்துவர் மாலையம்மாள் உடனிருந்தனர்.

குமரி மாவட்டம்

இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 510 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குறைவான மக்களே வந்திருந்தனர். வட்டக்கரை புனித வளனார் சமூக நலக்கூடம், மேலச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி, தொலையாவட்டம் புனித மேரி தொடக்கப்பள்ளி, முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி, ஏழுதேசபற்று அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 510 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குறைவான மக்களே வந்திருந்தனர். ஆட்சியர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்