காந்தி ஜெயந்தியையொட்டி - கதர் பொருட்கள் விற்பனை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் தீபாவளி பண்டிகை கதர் விற்பனையை 3 மாவட்ட ஆட்சியர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நாடு முழுவதும் காந்தியடி களின் 153-வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, வேலூர் கோட்டை முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், வடாற்காடு சர்வோதய சங்கத்தில் கதர் கிராம தொழில் பவன் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை மற்றும் காதி கிராப்ட் அங்காடியில் கதர் சிறப்பு விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மேலும், ‘‘அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சுலப தவணையில் கதர் ரகங்களை வாங்கி பயன் படுத்த வேண்டும்’’ என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர் களுக்கு ஆட்சியர் இனிப்புகளை வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கதர் கிராம தொழில் வாரியத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘பொதுமக்கள் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்க வேண்டும்’’ என தெரிவித்தார். அப்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்