உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட - 4 டேங்க் ஆபரேட்டர்கள் சஸ்பெண்ட் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நடவடிக்கை

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித்தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 டேங்க் ஆபரேட்டர்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தர விட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சோம நாயக்கன்பட்டி ஊராட்சியில் குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அதே ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டர் களாக பணியாற்றி வரும் சின்ன கண்ணன் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதேபோல, பாச்சல் ஊராட்சி யில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வரும் மணி என்ப வரின் மனைவி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடுவதால் வேட்பாளருக்கு ஆதர வாக மணி என்பவர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கம்பட்டு ஊராட்சியில் டேங்க் ஆப ரேட்டராக பணியாற்றி வரும் துக்கன் மனைவி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டி யிடுவதால் அவருக்கு ஆதரவாக டேங்க் ஆபரேட்டர் துக்கன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் நோட்டீஸில் தனது பெயரை அச்சிட்டு அதை வாக்காளர்களிடம் வழங்கி நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த தகவல்களை திரட்டி ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவுக்கு புகாராக அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்தி அரசு விதிகளை மீறியும் தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாமல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 டேங்க் ஆபரேட்டர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று உத்தரவிட்டார்.

வேலூர்

வேலுார் மாவட்டம் அணைக் கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 51 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், கந்தநேரி, இலவம்பாடி, அக்ராகரம், பாக்கம், குருவராஜ பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளில், செயலாளர்களின் மனைவிகள் சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலில் போட்டிடுவதாகவும், இதற்காக அந்தந்த ஊராட்சிச் செயலாளர்கள் தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

எனவே, அணைக்கட்டு ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சிச் செயலாளர்கள் அலுவ லகம் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வேண்டும். ஊராட்சி தேர்தல் பிரr்சாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அணைக்கட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான கனகராஜ் எச் சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்