ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - 4-ம் கட்டமாக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் : வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்கள்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4-ம் கட்டமாக நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

கரோனா பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 18 வயது பூர்த்தியடைந்த அனை வருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் கால இடைவெளி விட்டு செலுத்தப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்களில் தினசரி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், பொது மக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் 100 சதவீதம் இலக்கை எட்ட முடியாமல் பல மாவட்டங்கள் அதற்கான முயற்சியை எடுத்து வருகின்றன.

இதற்கிடையே, தடுப்பூசியை முழுமையாக செலுத்த வேண்டும் என்பதால் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாவட்டந்தோறும் மெகா கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாநில சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 4-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. வேலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து, பொது மக்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர் களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 497 முகாம்களில் நேற்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அம்மூர், சோளிங்கர், அரக் கோணம், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், வாலாஜா, கலவை மற்றும் மேல்விஷாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். சில பகுதிகளில் வீதி, வீதியாக சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தினார். நேற்று நடைபெற்ற முகாமில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகா தாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 485 முகாம்களில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. ஆம்பூர், வாணியம்பாடி, திருப் பத்தூர், நாட்றாம்பள்ளி போன்ற பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.

ஆம்பூர், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்ற ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப் புணர்வு ஏற்படுத்தினார். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18,500 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட் டத்தில் 4-வது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 1,017 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இரவு 7 மணி வரை 53,892 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம், மேல் செட்டிப்பட்டு மற்றும் மேலதிக்கான் ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாகளை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்