காந்தியடிகளின் 153-வது பிறந்த தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில்அமைந்துள்ள அவரது சிலைக்குவனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே பகுதியில் உள்ள கதர் அங்காடியில் காந்தியடிகளின் உருவப் படத்தை திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தபின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு 2021-2022-ம் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் ரூ.20.96 லட்சம் மதிப்பில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, கதர், பாலியஸ்டர், பட்டு துணிகளுக்கு தலா 30 சதவீதமும், உல்லன் துணிகளுக்கு 20 சதவீதமும் அரசு சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது,’’ என்றார்.
பணியின்போது உயிரிழந்தமின்வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், பணிநியமன ஆணைகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார். காந்தல் புதுநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ரங்கநாதனின் மனைவி ரேவதி என்பவர் வேலைவாய்ப்பு வேண்டி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பிரிவில் தற்காலிக அலுவலகஉதவியாளராக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago