செங்கை, காஞ்சி மாவட்டங்களில் மகாத்மா காந்தி 153-வது பிறந்த நாள் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவையொட்டி காந்தியடிகளின் படத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையையும் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தொடங்கி வைத்தார். இங்கு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகத்துக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலவர் இரா.மேனுவல்ராஜ், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கோப்பு வல்லுநர்கள் சுபாஷ், செந்தில்குமார், மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் ரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கத்தில் உள்ள காதிகிராஃப்ட் விற்பனை நிலையத்தில் உள்ள அவரது படத்துக்கு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி பண்டிகை கால கதர் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் கு.காமாட்சி, காதி கிராஃப்ட் மேலாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்