கழிவுநீர் கால்வாய் பணிக்கு எதிர்ப்பு: 30 பேர் கைது :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மருதூர் ஏரியில் கழிவு நீர் கால்வாய் நிலையப் பணிகளுக்கான குழியை மூடமுயன்ற 30 பேர் கைது செய்யப் பட்டனர்.

விழுப்புரம் வி.மருதூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆனால் அங்கு ரூ.50 கோடி செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இதனை கண்டித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வி.மருதூர் ஏரியில் கழிவு நீர் கால்வாய் நிலையப்பணிகளுக்கான குழியை மூடும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகிலன் தலைமை தாங்கினார்.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸார் 30 பேரை கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்