கடலூர் அருகே திருவந்திபுரம் - கோயிலுக்கு சென்ற பக்தர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர் :

By செய்திப்பிரிவு

திருவந்திபுரம் கோயிலுக்கு சென்ற பக்தர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தில் கரோனா பரவலைதடுக்கும் வகையில் வெள்ளி, சனி,ஞாயிறு மற்றும் முக்கிய விழாநாட்களில் கோயில் திறக்கக்கூடாதுஎன தமிழக அரசுஉத்தரவிட் டுள்ளது.

இந்நிலையில் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவதாதசாமி கோயிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையான நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பக்தர்களை ஊர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். இதனையெடுத்து பக்தர்கள் அதே பகுதியில் தங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வைத்து கற்பூரம் ஏற்றி தேவநாதசாமியை நினைத்து வழிபட்டனர். மேலும் ஆற்றங்கரையில் முடிகாணிக்கைசெலுத்தி நேர்த்திகடன் நிறைவேற் றினர். ஆனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதே போல் திருவந்திபுரம் கோயிலுக்கு செல்ல பேருந்தில் வந்த பக்தர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அதே பேருந்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் கோயில் பகுதிக்கு பக்தர்கள் செல்ல முடியாத வகையில் கோயிலை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக் கப்பட்டிருந்தது.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்