காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் காந்தியின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் பாலியஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படு கிறது. விருதுநகர் மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, விருதுநகர் ரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்தார். பின்னர் சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது வாறுகால், ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி, பொது மயானத்தில் புதிய கை பம்பு ஆகியவற்றை அமைக்க நிர்வாக அனுமதி ஆணைகளை ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, கரோனா தடுப்பு உபகரணங்கள், மகளிர் குழுக்களுக்கு ரூ.1.45லட்சம் நிதியை ஆட்சியர் வழங்கினார்.
தேனி
தேனி காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள கதர்கிராமத் தொழில் வாரியத்தில் சிறப்பு கதர் விற்பனை தொடங்கியது. ஆட்சியர் க.வீ.முரளிதரன் விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில் கதர் அங்காடிகளுக்கு நடப்பாண்டு விற்பனை இலக்காக ரூ.58 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago