எனது கணவர் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில் எந்த தவறுமில்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் குன்றக்குடி ஊராட்சித் தலைவர் அலமேலு மங்கை தெரிவித்தார். கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
காரைக்குடி அருகே குன்றக்குடியில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் அலமேலு மங்கை தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொன்னம்பல அடிகளார், துணை பிடிஓ ஆதின மிளகி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சுப்பிரமணியன் என்பவர் பேசுகையில், ஊராட்சித் தலைவரின் கணவர், தலைவரின் இருக்கையில் அமர்கிறார். மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது, ‘ஊராட்சித் தலைவரின் கணவர் நிர்வாகத்திலோ, கூட்ட விவாதங் களிலோ தலையிட எந்த அதிகார மும் இல்லை’ என பிடிஓ சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் உரிய விளக்கம் தர வேண்டும் எனக் கேட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஊராட்சித் தலைவர் அலமேலு மங்கை, "பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில், அவர்களது கணவர்களின் தலையீடு இருக்கத் தான் செய்கிறது. அதில் எந்த தவறுமில்லை" என்று கூறினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago